நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத பள்ளி ஆசிரியர் பிரபாகரனுக்கு  நல்லாசிரியர் விருதினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் .!

தென்காசி

நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத பள்ளி ஆசிரியர் பிரபாகரனுக்கு  நல்லாசிரியர் விருதினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் .!

நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத பள்ளி ஆசிரியர் பிரபாகரனுக்கு  நல்லாசிரியர் விருதினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தென்காசி செப் 06

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கும்  விழா தமிழக அரசின் சார்பாக செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து நடைபெற்றது.

இவ்விழாவில் தென்காசி மாவட்டம் நெடுவயல் ஸ்ரீ சிவசைல நாத நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பிரபாகரனுக்கு  நல்லாசிரியர் விருதினை  தமிழக துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  வழங்கினார். பள்ளிக்கும், நெடுவயல், அச்சன்புதூர், ஊர்களுக்கு பெருமை தேடி தந்த ஆசிரியர் பிரபாகரனை பள்ளி நிர்வாகம்,  தலைமையாசிரியர் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பாக வெகுவாக பாராட்டினர்.பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நல்லாசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

சௌய்தியாளர்

 AGM கணேசன்