தென்காசி புனித மிக்கேல் ஆலய இறை மக்கள் சார்பில், நகராட்சி சேர்மனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் .!
தென்காசி

தென்காசி புனித மிக்கேல் ஆலய இறை மக்கள் சார்பில், நகராட்சி சேர்மனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி செப் 06
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய இறைமக்கள் சார்பில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.400 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலிக்கும் கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தரும் புனிதமிக்கேல் அதிதூதரின் ஆலயத்திற்கும், அங்கு நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கும், குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆலயத்திற்கு எதிராக அமைந்திருக்கும் தினசரி சந்தையின் இரு நுழைவு வாயிலை அகற்றும் படியும், ஆர் சி பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விளையாட்டு மைதானத்தில் நிறுவப்பட இருக்கும் ரேசன் கடையை இடம் மாற்றம் செய்யும்படியும், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் மற்றும் ஆணையாளரின் முரண்பட்ட செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பண்டாரக்குளம் வட்டார அதிபர் அந்தோணிசாமி அடிகளார் தலைமை வகித்தார். மரிய லூயிஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.தென்காசி பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் வரவேற்புரை ஆற்றினார்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தென்மண்டல அமைப்புச் செயலாளர் ரவி, பங்கு பேரவை ஜோதி காசி, சந்திரசேகர், ஆர்சி பள்ளி ஆசிரியர் அமலி செல்வராணி, ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆலங்குளம் பங்குத் தந்தை ஜேசுராஜ் கண்டன விளக்க உரை ஆற்றினார். இதில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் மற்றும் ஆணையாளரை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் வல்லம் பங்குத்தந்தை விசுவாச ஆரோக்கிய ராஜ்,புளியங்குடி பங்குத்தந்தை எட்வின், மறை மாவட்ட பொருளாளர் தீபக், மேல மெஞ்ஞானபுரம் பங்குத்தந்தை அல்போன்ஸ், சிதம்பராபுரம் பங்குத்தந்தை அந்தோணி ராஜ் வாடியூர் லியோ ஜெரால்டு, சுரண்டை ஜோசப் ராஜன், தென்காசி உதவி பங்குத்தந்தை ஜியோ சந்தனம், மற்றும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர், தென்காசி, அகரக்கட்டு, மேல மெஞ்ஞானபுரம், பண்டாரக்குளம், வல்லம், இறை மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் அகரக்கட்டு பங்குத் தந்தை அலோய்சியஸ் துரைராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்