உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிராகசம் துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார்.!
கிருஷ்ணகிரி

காட்டிநாயனப்பள்ளி சமுதாய கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிராகசம் துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகள் மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாய கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் இந்த முகாமில் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைப் பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், கல்விக் கடன், புதிய குடும்ப அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறை வாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள். இதில் காட்டி நாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் இந்த முகமாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
மேலும் இந்த முகாமில் திமுக துணை அமைப்பாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் திருமதி கலா வேலாயுதன், மாவட்ட மாணவரணி அணி அமைப்பாளர் ராமசந்திரன், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் பையம்மாள் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சளா வெங்கடேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம மக்கள் பயன் பெறும் வகையில் நடைப்பெற்ற இந்த முகாமில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாணிக்கம், ஒன்றிய கணை அமைப்பாளர் சதிஷ்குமார் மற்றும் லட்சுமணன், சேட்டு உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ