தென்காசி ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் .!

தென்காசி

தென்காசி ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் .!

தென்காசி ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தென்காசி ஆகஸ்ட் 13

தென்காசியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இருப்பு பாதை காவல்துறை இயக்குனர் திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்  திருநெல்வேலி இருப்பு பாதை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  திருநெல்வேலி இருப்புப்பாதை வட்ட காவல் ஆய்வாளர்  அறிவுரையின்படி வருகிற15 ஆம் தேதி இந்தியாவின் 79வது சுதந்திர தினநாளை முன்னிட்டு தென்காசி ரயில் நிலையம், பார்சல் அலுவலகம்,  வாகனங்கள், ஆட்டோக்கள் பயணிகள் கொண்டு வரக்கூடிய பொருட்கள்,மற்றும் பேக்குகளை தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் எஸ். கற்பகவிநாயகம்,. மாரியப்பன்  சிறப்பு சார்பு ஆய்வாளர், ராஜேஷ், காவலர்கள்  வெங்கடேஸ்வரன்,  உதயசங்கர், ரயில்வே துறை அலுவலர்  வேல்முருகன்,
ஆகியோர் தணிக்கை செய்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்