ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் என்கின்ற சென்ராய சாமி திருக்கோயில் திருப்பணி. !
ஆண்மீகம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பிகினல்லி பஞ்சாயத்தில் அமைந்துள்ள துருகம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் என்கின்ற சென்ராய சாமி திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஆட்சி செய்த விஷ்ணுவர்தனால் நிர்மாணிக்கப்பட்டது.
இத்திருக்கோவில், இன்று திருக்கோயிலுக்கு தலைவராக இருக்கின்ற வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி முனுசாமி மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட மக்களின் உதவிகளோடு திருப்பணி நடைபெற்று மிகப் பிரமாண்டமான திருக்கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் பெருமானுடைய திரு அவதாரக் காட்சி இந்த திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் வலது கரத்தில் சங்கும் இடது கரத்தில் சக்கரமும் ஏந்தி பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளிக்கின்றார்.
செய்தியாளர்
மாருதி மனோ
