ஓசூர் மாமன்ற கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு மறுப்பு. ! விரைவில் ஆர்ப்பாட்டம். !
கிருஷ்ணகிரி

ஓசூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்புக்கு அதிமுக எதிர்ப்பு. விரைவில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த திட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் எஸ் ஏ சத்யா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், அஜித் குமாரின் லாக்கப் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கூறியும் இதற்கு காரணமான திமுக அரசை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சட்டைகளில் பேட்சுகளை அணிந்து வந்தனர்.
இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் யாரையும் புகைப்படம் எடுக்கவோ வீடியோ பதிவு செய்யவும் வேண்டாம் என்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து செய்தி சேகரிக்கவும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.
பத்திரிகையாளர்கள் மாமன்ற கூட்டங்களில் வந்து செய்தியை சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கவில்லை ஆனால் அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதாக பதில் அளித்தார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ் தெரிவிக்கையில்,
இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் வரவேண்டாம் என மேயர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
மேலும் மக்களின் குறைகள் குறித்து அவர்களின் தேவைகள் பற்றித்தான் மாமன்ற கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களை பத்திரிகை வாயிலாக வெளியிடுவதற்கு அவர்கள் செய்தி சேகரிக்கிறார்கள்.
எனவே அவர்களை புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ பதிவு செய்வதற்கு அனுமதிக்க மறுப்பது ஏன் அதற்கான விளக்கம் வேண்டும்... என கோரி இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை இதுவரை மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு அந்த வார்டுகளுக்கு எந்த தேவைகளையும் நிறைவேற்றி தரவில்லை.. என குற்றம் சாட்டினார்.
எனவே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக பொதுச்செயலாளர், மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரின் ஆணைகளுக்கு இணங்க அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் அல்லது உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்
உடன் மண்டல குழு தலைவர் புருஷோத்தம ரெட்டி, நகரமைப்பு குழு தலைவர் அசோக ரெட்டி,மாமன்ற உறுப்பினர்கள் மஞ்சு,சிவராமன், ரஜினி, லட்சுமி ஹேமகுமார், ஷில்பா சிவக்குமார், தில்ஷத் ரகுமான், புஷ்பா வரதராஜ்,முருகம்மா மதன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ