குற்றாலம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் .!

தென்காசி

குற்றாலம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் .!

குற்றாலம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

தென்காசி ஜூலை 4

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அறிவுறுத்தலின்படி
தென்காசி மாவட்டம்குற்றாலம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் குற்றாலம் கோவில் வாசல் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு குற்றாலம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் கனி ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஏ ஆர் எம் அழகு சுந்தரம், தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா, குற்றாலம் பேரூர் செயலாளர் குட்டி என்ற சங்கர், குற்றாலம் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் பாண்டியன் அவைத் தலைவர் மாடசாமி பாண்டியன் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் விக்னேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார். குற்றாலம் பேரூர் துணை செயலாளர் கருணாநிதி மாரியப்பன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் தொகுப்புரை ஆற்றினார்.

தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கலை கதிரவன் கழக பேச்சாளர் வெல்டிங் மாரியப்பன் இளம் பேச்சாளர் சாகுல் ஹமீது கான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜ்வீரபாண்டியன் சுடர் பழனி பண்டார சிவன் சோமசுந்தரம் சக்தீஷ் கணேஷ்முத்துலிங்கம் சுப்புராஜ் இசக்கியம்மாள் முத்துக்குமார் திருமலை குமார்ராமர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொக்கி குமார் செந்தில் ஆறுமுகம் சாகுல் ஹமீது உள்ளிட்ட . பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் குற்றாலம் பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இசக்கி ராஜா ஹரிஹர சுதன் ஆகியோர் நன்றி கூறினர்.

செய்தியாளர்

AGM கணேசன்