செட்டிமாரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

செட்டிமாரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டிமாரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லிகை சாகுபடி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மல்லிகை செண்ட் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள செட்டிமாரன்பட்டி கிராமத்தில் தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் கிளை சங்க துவக்க விழா மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

செட்டிமாரன்பட்டி கிளைச் சங்க தலைவர் ராஜ்குமார், கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இத்த கூட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் கதிர்வேல், சந்திரசேகர், வேலு, கே. வெங்கடேசன், லட்சுமணன், தேவராஜ், கோவிந்தசாமி, ஆசிரியர் சிவகுமார் செல்வராஜ், திருமதி தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின்  மாநில தலைவர் வெங்கடேசன், மாநில செயலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு கிளைச் சங்கத்தினை துவக்கி வைத்து சங்கத்தின் கொடியினை ஏற்றிவைத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து  சிறப்புரையாற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இக்கூட்டத்தில் காவேரிப்பட்டினம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும், மாட்டு தீவனங்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தப்பட வேண்டும், மல்லிகை பூ அறுவடை செய்யும் இயந்திரம் வழங்கிட வேண்டும், கிருஷ்ணகிரி மாவட்ட மல்லிகை பூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமைத்திட வேண்டும், கூட்டுறவங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மயில், குரங்கு, காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும், ரேசன் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் தோறும் இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்தக் கூட்டத்தில் தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தினை சேர்த்த குமரன், கோவிந்தராஜ், சின்னசாமி, பாலாஜி, கராத்தே ராமசாமி, கிருஷ்ணன், பெரியசாமி, உதய குமார், பாபு, முருகன், சிவலிங்கம், மஞ்சு, கிருஷ்ணம்மாள். வேடியப்பன், சேகர், சுரேஷ், ராம்குமார், வேடியப்பன், , விஜயகுமார், சின்னசாமி, மன்னார், பிரகாஷ், பாலாஜி, மோகன சுந்தரம், வேலு, சாந்தகுமார், கோவிந்தராஜி,  அருள் சுந்தர், கோவிந்தசாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ

.