இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு.???

திமுக கூட்டணி

இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு.???

திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக ஆகிய 4 முனை போட்டி நிலவுகிறது.

புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா, தனியாக போட்டியிடுவாரா இல்லை தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேற்கண்ட 4 முனை போட்டியில் ஜெட் வேகத்தில் செல்வது சீமான் மட்டுமே, அவர்தான் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். தவெகவில் கூட விருப்பமனுக்களை பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

அது போல் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கி சில கட்சிகளுடன் உடன்படிக்கையும் நடந்துவிட்டது. ஆனால் அதிமுகதான் இன்னும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையை கூட ஏற்படுத்தாமல் இருக்கிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் முதலில் எந்தெந்த கட்சிகள் இணைந்துள்ளன என்பதை பார்க்கலாம்.

1. திமுக

2. காங்கிரஸ்

3. மதிமுக

4. இந்திய கம்யூனிஸ்ட்

5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

6. விடுதலை சிறுத்தைகள்

7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

8. தேமுதிக

9. மனிதநேய மக்கள் கட்சி

10. மக்கள் நீதி மய்யம்

11. தமிழக வாழ்வுரிமை கட்சி

12. மக்கள் விடுதலை கட்சி

13. ஆதித்தமிழர் பேரவை

14. அகில இந்திய பார்வர்டு பிளாக்

15. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

16. எஸ்டிபிஐ

17. மனிதநேய ஜனநாயகக் கட்சி

18. முக்குலத்தோர் புலிப்படை

19. கொங்கு இளைஞர் பேரவை

20. திராவிட வெற்றிக் கழகம்

21. புதிய திராவிட கழகம்

22. ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அது போல் புரட்சி அதிமுக என்ற கட்சியை தொடங்கியுள்ள பெங்களூர் புகழேந்தி, திமுகவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை செய்வேன் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்டது. அந்த குழு முதலில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

அதன்பிறகு இடதுசாரிகள், மதிமுக, உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.

இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது என்பதை பார்க்கலாம்.

காங்கிரஸ் - 28 தொகுதிகள்

கம்யூனிஸ்ட்- 2 தொகுதிகள்

மார்க்சிஸ்ட்- 2 தொகுதிகள்

மதிமுக - 4 தொகுதிகள்

மமக- 2 தொகுதிகள்

ஐயூஎம்எல்- 2 தொகுதிகள்

கொமதேக- 2 தொகுதிகள்

ஆக மொத்தம் 234 தொகுதிகளில் 42 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 192 தொகுதிகளில் விசிக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், தவாக, சிறிய கட்சிகள் போக திமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கெனவே விசிகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. ஆனால் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.