காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் பேருந்துநிலையம் முன்பு அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர். !

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் பேருந்துநிலையம் முன்பு அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர். !

இன்று (20-11-2025) கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் பேருந்துநிலையம் முன்பு அமைக்கப்பட்டு வரும் சாலையினை  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான கே.அசோக்குமார் MLA ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த சாலை ஒப்பந்ததாரரிடம் சாலை அமைக்கும் பொழுது பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் அருள்மிகு அங்காளம்மன் பூங்காவனத்தம்மன் திருத்தேர் செல்லும் சாலையில் இடையூறு இல்லாமல் பக்தர்கள் வசதிக்காக சீர் செய்து தரும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார் 

இந்நிகழ்வில் நகரக் கழக செயலாளர் விமல், மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் விக்ரம் குமார், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கேசவன்  ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ