கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் கோபுர மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் எம் எல் ஏ கே பி முனுசாமி.

கிருஷ்ணகிரி

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் கோபுர மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் எம் எல் ஏ கே பி முனுசாமி.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் கோபுர மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் எம் எல் ஏ கே பி முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிகரமாரணபள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்ரி, கொங்கணப்பள்ளி, கட்டாயம்மேடு ஆகிய மலை கிராமங்களில் வாமும் கிராம மக்கள் தங்களது கிராமங்களுக்கு உயர் கோபுர மின்விளக்குகளை அமைத்து கொடுக்க வேண்டும் என வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட இந்த கிராமங்களில் நீண்ட காலமாக மின் விளக்குகள் இல்லாததாலும் இருளில் மூழ்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு அப்பகுதியில் வாழும் கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவது பெரும் சவாலாக இருந்து வந்தது. பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி, உயர் கோபுர மின் விளக்குகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் கழக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் IS இன்பதுரை எம்.பி. யிடம் இது சம்பந்தமாக பேசி, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்ற அவர் இருளில் மூழ்கி கிடந்த மலை கிராமங்களுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் IS இன்பதுரை அவர்களின் நிதியின் கீழ் உயர் கோபுர மின் விளக்குகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் சிகரமாரணபள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்ரி, கொங்கணப்பள்ளி, கட்டாயம்மேடு ஆகிய மலை கிராமங்களில் இன்று நீண்ட காலமாக வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
.
வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், இரவு நேர போக்குவரத்தை எளிதாக்கவும், எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி மற்றும் அதிமுகவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


 இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், வேப்பனப்பள்ளி ஒன்றிய கழக செயலாளர்கள் ராமமூர்த்தி, சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ஜெய் பிரகாஷ் மற்றும் வேப்பனஹள்ளி ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊர் கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.