போத்தாபுரம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் கொடியேற்று விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், போத்தாபுரம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் கொடியேற்று விழாவில் மாட்டுத்தீவனங்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய ஆவின் முன்வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தில் தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கத்தின் கொடியேற்று விழா மற்றும் சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் செயலாளர் பழனி மற்றும் விவசய சங்கத்தினை சேர்ந்த சங்கர், கஜேந்திரன், ஆனந்தகுமார், செல்வராஜ், சரத்குமார், சிவகுமார், உதயகுமார், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து சங்கத்தின் கொடியினை சங்கத்தின் செயலாளர் பழனி ஏற்றி வைத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக நெல் குவிண்டலுக்கு ரூ.4000 ஆயிரம் வழங்கிட வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்,
மாட்டுத் தீவினத்தின் விலையை கருத்தில் கொண்டு ஆவின் நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்,
யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நூறுநாள் வேலையை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்....
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தில் தமிழக எழுச்சி விவசாய சங்கத்தினை சேர்ந்த முன்னாள் ஆவின் தலைவர் குப்புசாமி, தமிழ்சோலை, வெங்கடேசன், திருப்பதி, லட்சுமணன், எட்டியப்பன் மற்றும் மகளீர் அணியை சேர்ந்த தனலட்சுமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
