ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில், ரூ.12 கோடியே 85 இலட்சம் மதிப்பில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகத்திற்கு பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில், ரூ.12 கோடியே 85 இலட்சம் மதிப்பில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகத்திற்கு பூமி பூஜை. !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில், ரூ.12 கோடியே 85 இலட்சம் மதிப்பில் 9,000 மெ.டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில், ரூ.12 கோடியே 85 இலட்சம் மதிப்பில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), தே.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். 

உடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொதுமேலாளர் தணிகாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ