தந்தைப் பெரியார் சிலை அமைக்க ரூ 1 லட்சம் நிதி .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எல் சுப்பிரமணியன் தந்தைப் பெரியார் சிலை அமைக்க ரூ 1 லட்சம் நிதி வழங்கினார்.
தாழ்ந்து கிடந்த தமிழனை தட்டி எழுப்பி தன்மான உணர்வு ஊட்டிய , அறிவுலக தந்தை பெரியாரின் அருந்தொண்டை உலகறியச் செய்யும் வகையில் திருச்சி சிறுகனூரில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் 'பெரியார் உலகம்' அமைய உள்ளது.
இப்பணிக்காக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் அவர்கள் திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் பெரியார் சிலை அமைக்கும் பணிக்காக தனது குடும்பம் மற்றும் தனது தாய் தந்தையான காவேரிப்பட்டினத்தை சேர்ந்த லோகநாதன் - முனியம்மாள் ஆகியோரின் நினைவாக ரூ 1 இலட்ச ரூபாய் நன்கொடையை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்டத் தலைவர் திராவிடமணி, மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி ஆகியோரிடம்
வழங்கினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
