ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு அன்னதான பெருவிழா .!

கிருஷ்ணகிரி

ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு அன்னதான பெருவிழா .!

ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு அன்னதான பெருவிழா, திருவிளக்கு பூஜை மற்றும் சித்தர் வழிபாடு, கொல்லிமலை கிழக்கு அடிவாரம் புளியஞ்சோலையில் நடைபெற்றது.

உலக சித்தர்கள் திரு சபையின் சார்பில் நடைபெற்ற பூஜையை  நிர்வாகிகள் அனைவரும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விழாவிற்கான  சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி ஸ்ரீ ராமானுஜ ஜியர் சுவாமிகள், சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா, சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார், பால திரிபுரசுந்தரி மடத்தின் ஸ்தாபகர் பாலா தேவராஜன் மற்றும் பல்வேறு மடங்களை சார்ந்த மடாதிபதிகள் மேற்படி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

மடாதிபதிகள் அனைவரும் அன்னாபிஷேகம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ