இந்திய தொழிலாளர் கட்சி மற்றும் இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு கரும்பு அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டியம்பட்டி கிராமத்தில் இந்திய தொழிலாளர் கட்சி மற்றும் இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு கரும்பு அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டியம்பட்டி கிராமத்தில் இந்திய தொழிலாளர் கட்சி மற்றும் இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சங்கத்தின் மாநில தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சங்கத்தின் மாநில பொருளாளர் மனோகரன், மாவட்டத் தலைவர் காளியப்பன். சங்கத்தின் செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த விழாவின் போது சிறப்புரை ஆற்றிய மாநில தலைவர் சிவகுமார்.....
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வழங்கி வருகிறது. ஆகையால் கட்டுமானத் தொழில் செய்து வரும் தொழிலாளிகள் அனைவரும் கட்டுமான நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து தமிழக அரசு வழங்கும் திட்டங்களை பெற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பொங்கல் விழாவினை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக இரண்டு கரும்புகள், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட கரும்பு உள்ளிட்ட பொருள்களை ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
மேலும் இந்த விழாவில் இந்திய தொழிலாளர் கட்சி மற்றும் இந்திய தொழிலாளர் பேரவையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
