தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவையின் சார்பில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவையின் சார்பில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக எச்.எம்.எஸ். தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவையின் சார்பில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, ஹிந்து மஸ்தூர் சபா (எச்.எம்.எஸ்.) தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவையின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளிகளுக்கு எதிரான நான்கு தொகுப்பு சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட மின் அமைப்பாளர்களின் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்திற்கு  மாவட்ட பொருளாளர் சீனிவாசகவுடு, சங்கத்தின் தலைவர் சிவகுமார், சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன், கிளைச் செயலாளர்  இருதய நாதன் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கண்காணிப்பு குழு உறுப்பினர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினார்

மேலும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்  ரூபாய் 7000 வழங்க வேண்டும், 
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 6000 வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு, மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் தொழிலாளர்கள் மக்களுக்கு நிபந்தனை இன்றி மின் இணைப்பு வழங்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை நீக்கம் செய்யப்பட வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் இளங்கோவன்...... வருஷமெல்லாம் உழைக்கும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ7000 வழங்க வேண்டும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் எதிரான நான்கு சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக  தெரிவித்தார் 

மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பூங்காவனம், மாதேஷ், மணி, திம்மராஜ், அமானுல்லா, முனுசாமி, வேலாயுதம், விநாயகம், கிருஷ்ணமூர்த்தி, திலீப் குமார், தென்னரசு, தமிழ்செல்வன், லோகநாதன், விஜயகுமார், சிவசங்கர், செல்வராஜ், பொன்னுசாமி, மாதையன் மற்றும் கிருஷ்ணகிரி கிளை தலைவர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ