கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் நயினர் நாகேந்திரன் அவர்களை தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி தேசிய மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி தமிழகத்தில் நல்லாட்சி செய்திட தேசிய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துவதாக தெரிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
