கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 66 வயது மதிக்கத்தக்க முதியவருக்கு முதன்முறையாக கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜூலை மாதம் (4) நான்காம் தேதி ஓசூர் தாலுகா, ஆவலப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயது கொண்ட விவசாய கூலி தொழிலாளி திரு சுந்தரமூர்த்தி 66/ ஆ என்பவர் தீராத கடுமையான வயிற்று வலியின் காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக உள்நோயாலியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொண்ட அறுவை சிகிச்சை பிரிவு நிபுணர் குழுவினர் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது.
அனைத்து பரிசோதனைகளுக்குப் பின் மயக்கவியல் துறை நிபுணர்களின் ஒப்புதல் பெற்று அவருக்கு கடந்த சில31.7.2025 ஆம் நாள் அன்று அறுவை சிகிச்சை செய்திட முடிவு மேற்கொண்டு அறுவை சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவ குழுவினர் இணை பேராசிரியர் மரு சதாசிவம், மரு.சங்கீதா,உதவி பேராசிரியர்கள் மரு. ராசு, மரு.தனுஸ்ரீ, மரு. ஸ்ரீநிவாசன், மரு.உமா மகேஸ்வரி செவிலியர் திருமதி ஜெயந்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கணைய அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக கணைய புற்றுநோய் கட்டியை 31.07.25 அன்றே முழுமையாக அகற்றினர் மிகவும் சிரமமான அறுவை
சிகிச்சையான கணைய புற்றுநோய் கட்டியை (6) *ஆறு மணி நேரத்திற்கும் மேலும் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றி உள்ளனர். பின்னர் 16 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது நல்ல நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து நலமாக வீடு திரும்புகின்றார்
இந்த அறுவை சிகிச்சை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது இது அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் சுமார் 5 லட்சத்துக்கும் மேல் செலவாகும் அதனை இலவசமாகவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இன்று நலமுடன் வீடு திரும்பும் அவரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. சத்தியபாமா அவர்கள் நேரில் சந்தித்து அவருக்கு நோயைப் பற்றிய தாக்கத்தையும் அறுவை சிகிச்சை செய்த விதத்தையும் எடுத்துக் கூறி அறிவுரைகள் கூறினார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கும், மயக்கவியல் துறை மருத்துவர்களையும் செவிலியர்களையும் பாராட்டி, வாழ்த்தையும் தெரிவித்தார்
கணைய புற்றுநோய் கட்டி அகற்றும் சிகிச்சை பயனாளி திரு.சுந்தரமூர்த்தி அவர்களுடன் மருத்துவ கண்காணிப்பாளர் மரு. P. சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள், அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் மரு. சதாசிவம், மரு சங்கீதா, மரு.M.M.பிரசாந்த், மரு.சந்தோஷ்குமார்,மரு. ராசு, செவிலியர் கண்காணிப்பாளர் அனிதா உள்ளிட்டோர் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
