அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!

கிருஷ்ணகிரி

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு.!

தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் (TNSLSA) உத்தரவின்படி மற்றும் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு (DLSA), கிருஷ்ணகிரி வழிகாட்டுதலின்படி, தேசிய சட்ட சேவை தினம் முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மக்கள் நீதிமன்றம் (FAC), குடும்ப நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைவர் எஸ் நாகராஜன்,  கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிபதி திருமதி பி. டி. ஜெனிபர், மற்றும்  DLSA, கிருஷ்ணகிரி செயலாளர், சார்பு நீதிபதி என்.பத்மநாபன்  மற்றும் கிருஷ்ணகிரி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில்  காவேரிப்பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சங்கர்  கலந்து கொண்டார். 

பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சட்ட சேவைகள், POCSO சட்டம் 2012, இணைய குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு உரைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ