இராயக்கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாராயண சாமியின் நினைவு நாள் அனுசரிப்பு. !
கிருஷ்ணகிரி
இராயக்கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாராயண சாமியின் நினைவு நாளை யொட்டி மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமையில் நினைவு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயா நாராயணசாமி அவர்களின் 41 வது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை அருகே உள்ள எரிசின்னகவுண்டனஹள்ளி கிராமத்தில் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அனுமந்தராசு, சங்கத்தின் ஆலோசகர் கண்ணையா, மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தமிழக விவசாய சங்கத்தை நிறுவி விவசாயிகளுக்கு போராடி பல்வேறு திட்டங்களை பெற்றுக் கொடுத்த ஐயா நாராயணசாமியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ,
அப்போது தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த கிளைத் தலைவர் முருகேசன், துணைத்தலைவர் கோவிந்தராஜ், . கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் தமிழக விவசாய சேர்ந்த முனிராஜ், மதி, சுரேஷ் ,ரவி, சரவணகுமார், கோவிந்தராஜ், ராஜ்குமார், நாகராஜ், சின்னசாமி முருகன், முனுசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
