காவேரிப்பட்டினத்தில் சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வினாயகர் திருக்கோவில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.!

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டினத்தில் சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வினாயகர் திருக்கோவில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வினாயகர் திருக்கோவில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் 79-வது பிறந்த தினம் உற்சாகமாகக் கொண்டப்பட்டது.

இதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் தலைமையில் சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு காவேரிப்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வினாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அப்போது பூ மாலைகள், பழவகைகள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்ளை காங்கிரஸ் கட்சியினர் எடுத்து வந்து வினாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை  செய்தனர்.

இந்த பூஜையின் மூலமாக அன்னையின் சோனியா காந்தி அவர்கள் நீண்ட ஆயுளுடன், உடல் ஆரோக்கியாத்துடன் நலமுடன் வாழ வினாயகருக்கு பூமாலைகள் அணிவித்தும், பழவகைகள் படையலிட்டு மற்றும் வாசன திரவியங்கள் கொண்டு பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.

பின்னர் சோனியா காந்தியின் பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் வழங்கி சிறப்பித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எல். சுப்பிரமணியன்.....

இந்திரா காந்தியின் மருமகளாக இந்தியாவிற்கு வந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதோடு  நாட்டு மக்களின் பசியை போக்கிட மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பசியை போக்கி அன்னபூரணியாகவும், நாடு போற்றும் உத்தம தலைவியாக விளங்கும் எங்க பாசமிகு அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாளினை கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்வதேடு வருகின்ற காலங்களில் அன்னையின்  தலைமையில் காங்கிரஸ் கட்சி மலர்ந்திட இந்த நன்நாளில் உறுதி எடுப்போம் என்று குறிப்பிட்டார்.

அப்போது முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்து, முன்னாள் நகர தலைவர் தக்காளி தவமணி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஜாவித்கான், முன்னாள் கவுன்சிலர் இராதாகிருஷ்ணன், மாவட்ட கலைப்பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வட்டார பொறுப்பாளர் செல்வராஜ், கெளரவ தலைவர் கருணாமூர்த்தி, வட்டார துணைத்தலைவர்கள் கோவிந்தசாமி, தனபால் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சக்திவேல், கதிர்வேல், சரவணன், தேவேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ