டில்லியில் தமிழக தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. இரகு.!
கிருஷ்ணகிரி
டில்லியில் தமிழக தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. இரகு கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு செயல்பட்டு வெற்றி பெறவேண்டும் மற்றும் கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.


இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவருடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திமுக உடனடியாக தொகுதி பங்கீடு குறித்து குழு அமைக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சேர்ந்த காங்கிரஸ் தலைவர் எம்.சி. ரகு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி சேர்ந்த மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
