முதல்வர் தொகுதியில் YBM டிராவல்ஸ் உரிமையாளரை களமிறக்கும் த வெ க .!

சென்னை

முதல்வர் தொகுதியில் YBM டிராவல்ஸ் உரிமையாளரை களமிறக்கும் த வெ க .!

கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கும் தொழிலதிபர்...விஜயின் பக்கம் சாய்ஸ்  அச்சத்தில் மாற்று கட்சியினர் 

கோட்டை விடும் கொளத்தூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்புடன் 2026 சட்டமன்ற தேர்தல் 

ஸ்டார் தொகுதிகளை குறி வைக்கும் தவெக

நாடு போற்றும் ஆட்சி’ என்று மார்தட்டிவரும் ஆளும் தி.மு.க-வினர், ஆனால், முன்மாதிரியாக இருக்கவேண்டிய முதல்வரின் தொகுதியான கொளத்தூரே மோசமான சாலைகள், எங்கும் குப்பைகள், நிறைவடையாத பணிகள் என்று கந்தரகோலத்தில் இருப்பதாக தொகுதிவாசிகள் கதறுகின்றனர். 

குறிப்பாக சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் அவ்வப்போது நடக்கும் கொலை கொள்ளை சம்பவங்கள் திமுகவிற்கு எதிரான மனநிலையவே காட்டுகிறது. திமுக கடந்த தேர்தலின் போது இந்த தொகுதிக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது குறிப்பாக குமரன் நகர், இளங்கோ நகர், ஜி கே எம் காலனி போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பிரச்சனை மிகப் பெரிய அளவில் உள்ளது. 

மழைக்காலங்களில் கொளத்தூர் மிகப்பெரிய பாதிப்பு எதிர்கொண்டு வருகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுதல், தண்ணீர் தேங்குதல், கொசுத்தொல்லை என வட சென்னைக்கே உரித்தான பிரச்சினைகள் இங்கும் உண்டு. இதனையெல்லாம் சரி செய்து சிங்கார சிட்டியாக மாற்றுவேன் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார் ஆனால் அதுவும் நடைமுறைப்படுத்திய பாடு இல்லை

குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என அரசு ஊழியர்கள் விரக்தியில் உள்ளனர் குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் அதிகப்படியான அரசு ஊழியர்கள் உள்ளதால் மிகப்பெரிய தலைவலியை திமுகவிற்கு ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல பெரும்பாலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகமாக கொளத்தூர் பகுதியில் வசிக்கின்றனர் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக அடிக்கடி முதலமைச்சர் விழாக்கள் நடத்தி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாலும், மாநகராட்சி துணை பணியாளர்கள் 13 நாட்கள் போராடியும் முதலமைச்சர் கண்டு கொள்ளாதது அவர்கள் மத்தியில் ரண வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவர்களும் இந்த முறை திமுகவிற்கு எதிராக நிற்பார்கள் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் எத்தனை அம்சங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தமிழக வெற்றிக் கழகம் முனைப்பு காட்டி வருகிறது. 

கொளத்தூரில் இளைஞர்கள், பெண்களின் ஆதரவு விஜய்க்கு அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக்கழகத்தினர் முனைப்பாக உள்ளனர். ஸ்டாலினுக்கு எதிராக முதலியார் சமூகத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் அரவணைத்து செல்லக்கூடிய வேட்பாளரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வேட்பாளர் YBM டிராவல்ஸ் நிறுவனர் பாலாஜி என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமூக ஆர்வலராக வலம் வந்த அவர் தொகுதி முழுவதும் நற்பெயரை பெற்றுள்ளார். பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கி உறுதுணையாக நின்றுள்ளார்.  

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பக்கத்துணையாக பல்வேறு காலகட்டங்களில் நின்ற இவர் முதல் மாநாடு தொடங்கி அண்மையில் நடந்த கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது பேருந்துகளில் அழைத்து வந்து விஜயை சந்திக்க வைத்து நல்லப்படியாக மீண்டும் கரூரில் விட்டதில் நெகிழ்ந்த விஜய் கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் சாய்ஸாக இவரை தேர்தெடுத்துள்ளதாக  தகவல்.

சேகர்பாபுவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள திமுகவினரும் மாற்று வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி வரக்கூடிய சூழ்நிலையில் அதனை பயன்படுத்தும் விதமாக பாலாஜியை களம் இறக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாலாஜி நிற்கும் பட்சத்தில் கொளத்தூர் தொகுதி ஸ்டாலின் உதய சூரியன் அங்கு உதிக்காது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.