செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் பள்ளிகரணை காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு.!

சென்னை

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் பள்ளிகரணை காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு. 

ஆவணங்கள், ஆயுத கிடங்கு, உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். 

தாம்பரம் மாநகர காவல், பள்ளிகரணை காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் வழக்கம் போல் நடைபெறும் வருடாந்திர ஆய்வினை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இன்று மேற்கொண்டார். 

ஆய்வின் போது இது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் கோப்புகள், வருகை பதிவேடு,  காவலர்கள் செயல்பாடு, ஆயுத கிடங்கு, குற்றங்களின் எண்ணிக்கை, கண்டறியபடாத குற்றங்களின் விவரம், காவல் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். 

மேலும் காவல் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கவும், காவல் நிலையத்தை அணுகும் புகார் தாரர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவும் அறிவுறுத்தினார். 

ஆய்வின் போது செம்மஞ்சேரி உதவி ஆணையர் வெங்கடேசன், ஆய்வாளர் ராஜசேகர், உள்ளிட்டோர் இருந்தனர்.

செய்தியாளர்

         S S K