வேளச்சேரி போக்குவரத்து போலீஸார் பள்ளி மாணவர்களை வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.!

சென்னை

வேளச்சேரி போக்குவரத்து போலீஸார் பள்ளி மாணவர்களை வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். 

சென்னை வேளச்சேரி போக்குவரத்து போலீஸார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 500 பேர் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, மாசற்ற சென்னையை உருவாக்குவோம், சாலை விதிகளை கடைபிடிப்போம், விபத்தில்லா சென்னையை உருவாக்குவோம் என்று எழுதிய பேனரை கையில் ஏந்தி வேளச்சேரி 100 அடி சாலையில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அதில் மூன்று பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்ல கூடாது, செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், வேகமாக வாகனத்தை இயக்க கூடாது என பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்று பின்னர் பள்ளியை வந்தடைந்தனர். 

விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் என ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

         S S K