ஐ. நா. மக்கள் தொகை, பெண்கள்,இளைஞர்கள் உரிமைகள்ள் அமைப்பின் விருதினை பெற்ற தமிழ் பெண்மனி. !

கிருஷ்ணகிரி

ஐ. நா. மக்கள் தொகை, பெண்கள்,இளைஞர்கள் உரிமைகள்ள் அமைப்பின் விருதினை பெற்ற தமிழ் பெண்மனி. !

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நமது செய்தியாளர் மாருதி மனோவின் மகள், ஆவணப்பட இயக்குனர், ஊடகவியலாளர் ஹேமலதா ராக்கேஷ் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகார விருது.

நிவேதிதா எனும் திருநங்கையின் கல்வி குறித்து BBC செய்தி நிறுவனத்திற்காக ஹேமலதா ராகேஷ் எழுதிய செய்திக்காக ஐநா மக்கள் தொகை, பெண்கள், இளைஞர்கள் உரிமைகள் அமைப்பின் (UNFPA) ஆதரவுடன் வழங்கப்படும்  National Laadli Media & Advertising Awards for Gender Sensitivity 2025 விருது நேற்று வழங்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் 19.11.25 ஆம் தேதி, மும்பையில் டாடா அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த விருதினை ஹேமலதா ராகேஷ் பெற்றுக் கொண்டார்.

"ஹாட்ரிக் சாதனை"

 3 ஆண்டுகளாக இவ்விருதினை தொடர்ந்து ஹேமலதா ராகேஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னும் பல விருதுகள் பெற்று சாதனைகள் புரிய நியூஸ் டுடே தமிழ் செய்திக் குழுமம் சார்பாக வாழ்த்துக்கள்

ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )