தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!
தென்காசி
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி டிச 02
தென்காசி மாவட்டத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும், தடுத்திடவும், தென்காசி மாவட்டத்தை
வன் சாதிய கொடுமை மாவட்டமாக அறிவிப்பு செய்திடவலியுறுத்தியும், ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று மாலை நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் செல்வம், ஜான் தாமஸ், லிங்கவளவன்,வசந்த குமார், ஒருங்கிணைப்பு குழு மண்டல பொறுப்பாளர் சித்திக், ஆகியோர் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தனர். செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் எஸ்ரா டேனியல் வரவேற்புரை ஆற்றினார் தூத்துக்குடி, தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், மண்டல துணைத் தலைவர் குழந்தை வள்ளுவன், மாநில ஊடகப்பிரிவு துணை செயலாளர் ஆஷிக் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினர். காவல்துறையை கண்டித்தும், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், தென்காசி மாவட்டத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும், தடுத்திடவும்,தென்காசி
மாவட்டத்தை வன்சாதிய கொடுமை மாவட்டமாக அறிவிப்பு செய்திட வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கடையநல்லூர் அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் ரீகன்குமார், பொதிகைவளவன், செல்லத்துரை, துர்கா தேவி, வெற்றி செல்வி, தமிழ்ச் செல்வன், சுலைமான், பாக்கியராஜ்,
பீர் மைதீன், ரமேஷ்,பாக்கியநாதன்,
ஸ்ரீ பால், விவேகானந்தன், விவேக், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் இளஞ்சேரன் நன்றி கூறினார்.
தென்காசி டிச 02
தென்காசி மாவட்டத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும், தடுத்திடவும், தென்காசி மாவட்டத்தை
வன் சாதிய கொடுமை மாவட்டமாக அறிவிப்பு செய்திடவலியுறுத்தியும், ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று மாலை நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் செல்வம், ஜான் தாமஸ், லிங்கவளவன்,வசந்த குமார், ஒருங்கிணைப்பு குழு மண்டல பொறுப்பாளர் சித்திக், ஆகியோர் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தனர். செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் எஸ்ரா டேனியல் வரவேற்புரை ஆற்றினார் தூத்துக்குடி, தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், மண்டல துணைத் தலைவர் குழந்தை வள்ளுவன், மாநில ஊடகப்பிரிவு துணை செயலாளர் ஆஷிக் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினர்.
காவல்துறையை கண்டித்தும், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், தென்காசி மாவட்டத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும், தடுத்திடவும்,தென்காசி
மாவட்டத்தை வன்சாதிய கொடுமை மாவட்டமாக அறிவிப்பு செய்திட வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக கடையநல்லூர் அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதில் ரீகன்குமார், பொதிகைவளவன், செல்லத்துரை, துர்கா தேவி, வெற்றி செல்வி, தமிழ்ச் செல்வன், சுலைமான், பாக்கியராஜ்,
பீர் மைதீன், ரமேஷ்,பாக்கியநாதன்,
ஸ்ரீ பால், விவேகானந்தன், விவேக், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் இளஞ்சேரன் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
