முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, "முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ், 12 முன்னாள் படைவீரர்களுக்கு 30 சதவிகித வட்டி மானிய தொகை .!

கிருஷ்ணகிரி

முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, "முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ், 12 முன்னாள் படைவீரர்களுக்கு 30 சதவிகித வட்டி மானிய தொகை .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, "முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ், 12 முன்னாள் படைவீரர்களுக்கு 30 சதவிகித வட்டி மானிய தொகை ரூ.54 இலட்சத்து 80 ஆயிரத்து 700 மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., வழங்கினார். 

உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோபு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் திரு.சரவணன், முன்னாள் படைவீரர் நல அலுவலர் திரு.பெருமாள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ