சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் துவங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார், இதில் தலை கவசம் இன்றி வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர்களுக்கு தலைகவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழக முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கபட்டு வருகிறது. கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து சாலை விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கி, தலைகவசம் இன்றி வாகனத்தை ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்களுக்கு தலைக் கவசத்தையும் ஆட்சியர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி 200 -கும் மேற்பட்ட காவல் துறையினர்களும் இருசக்கர வாகன பேரணியுடன் தலைகவசம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.
சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியின் போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், அன்புசெழியன் சமுக ஆர்வாளர் சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
