உங்களுடன் ஸ்டாலின் முகாம். !

கிருஷ்ணகிரி

உங்களுடன் ஸ்டாலின் முகாம். !

கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் பஞ்சாயத்து
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்  வெங்கடாபுரம் ஊராட்சியில்,ஜாகீர் வெங்கடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏற்ற வகையில் வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் வகையில் அரசு  உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியை  வட்டார வளர்ச்சி அலுவலர்  சிவபிரகாசம் முன்னிலை வகித்தார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜி , ஊராட்சி செயலாளர் வேல்முருகன்,  நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர். கே.எம். சந்திரமோகன், நுகர்வோர் சங்க மாநில  துணைத்தலைவர் ஜெய்சன், மாவட்ட இணை செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னாள்  நுகர்வோர்  சங்க செயலாளர் முபாரக் மற்றும் சத்தியராஜ்  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை , வருவாய் துறை, போக்குவரத்து துறை ,மின்சாரத்துறை, வட்டார போக்குவரத்து  துறை , ஆகிய துறைகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்களின் குறைகளை தீர்த்து வைக்கப்பட்டது 

இது சம்பந்தமாக சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொது செயலாளர் டாக்டர். கே.எம் சந்திரமோகன் செய்தியார்களிடம்  பேசும்போது  :
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பொற்கால ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சியில் அனைத்து துறை சார்பில் பொதுமக்கள் குறைகளை நேரடியாக விசாரணை செய்து பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் . தினேஷ் குமார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு சமூக  நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ