தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் .!

தென்காசி

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் .!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் 

திரளான பக்தர்கள் பங்கேற்பு

 தென்காசி நவ 13

தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி  திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி தீபாராதனை சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

திருத்தேரினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து  துவக்கி வைத்தனர்.

இதில் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாக அதிகாரி பொன்னி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சண்முகவேல், மாவட்ட பொது செயலாளர்கள் ஏஜிஎம்.கணேசன், சந்தோஷ், நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பிரபா, அரவிந்த்,
பொருளாளர் ஈஸ்வரன், மாடசாமி, கண்ணன், மலையான் தெரு சுப்பிரமணியசாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் திமுக இசக்கிரவி, அதிமுக சொசைட்டி மாரிமுத்து, சுப்புராஜ்,பாஜக மாவட்ட துணை தலைவர் முத்துக்  குமார், நகர தலைவர் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், இந்து முன்ணனி இசக்கிமுத்து மற்றும் பொதுமக்கள், வர்த்தக பிரமுகர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்,

செய்தியாளர்

AGM கணேசன்