கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சையத் முனீர் அஹமத்  நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சையத் முனீர் அஹமத்  நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சையத் முனீர் அஹமத்
 நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பி.ஜி.புதூர் என்ற கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சையத் முனீர் அஹமத் இவர் காங்கிரஸ் கட்சியில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில்  வகித்து வந்துள்ளார்,

இந்த நிலையில் இந்திய தேசிய காங்கிரஸின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக சையத் முனீர் அஹமத் அவர்களை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் சாதிக்கான் அவர்களின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் முகமது ஆரிப் அம்சா அவர்களால் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து புதியதாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சையத் முனீர் அஹமத் தனக்கு பரிந்துரைத்த கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களை ஒசூரில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜேசு துரைராஜ், மேற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் அக்பர் , மாவட்ட துணை தலைவர் தளபதி ரகமத்துல்லா,  கிருஷ்ணகிரி நகர தலைவர் லலித் ஆண்டனி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்சூர், சதாம் உசேன், எஸ்.அக்பர்  உள்ளிட்ட மாநில பொறுப்பாாளர்கள் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் மற்றும் ஓசூர் இளைஞர் அணி தலைவர் நதீம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ