2026 தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி .!

தென்காசி

2026 தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி .!

2026 தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் 

தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

தென்காசி,ஜூலை 25

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும் அதில் புதிய தமிழகம் கட்சி இடம் வரும் என்று தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி 2 நாட்களாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்று வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த பயிலரங்கத்தின் போது 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:

வருகின்ற டிசம்பர் மாதத்தில் மதுரையில் நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில்  ஏற்படும்.கூட்டணி  ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் கட்சி கண்டிப்பாக பங்குபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் வெளிப்படையான ஊழல் இல்லாத ஆட்சிக்கு கூட்டணி ஆட்சி வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களை மிரட்டுவதாகவும், மக்களின் தகவல்களை திரட்டி மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் செய்கிறார்கள். எனவும் ஆகவே தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நான்கரை ஆண்டுகளில் திமுகவினர் சிறப்பாக ஆட்சி செய்தால் இப்போது ஏன் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், பாமகவில் தந்தை மகனுக்கு இடையே நடைபெறும் சண்டை தொடர்பாக பதில் அளித்த அவர், கொள்கை தொடர்பாக சண்டை போட வேண்டுமே தவிர, குடும்ப அடிப்படையில் பிரிவு என்பது தவறு எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

அதேபோல், சிறிய, சிறிய கட்சிகள் வர வர பெரிய கட்சிகள் ஒழிய வாய்ப்பு ஏற்படும் எனவும், ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ண பாண்டியன் மற்றும் ஷ்யாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்