கெலமங்கலத்தில் 100 சதவீதம் வாக்கு பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.!

கிருஷ்ணகிரி

கெலமங்கலத்தில் 100 சதவீதம் வாக்கு பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் 100 சதவீதம் வாக்கு பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்கு பதிவினை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களின் உத்தரவின்படி மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம்,  கெலமங்கலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் - 2026 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் 100 சதவிதம் வாக்கு பதிவினை வலியிறுத்தி பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியின் போது காய்கறி மார்க்கெட், மாட்டுச்சந்தை, கோழிச் சந்தை, பூ மார்க்கெட், ஆவின் பாலகம், பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில்  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது கெலமங்கலம் ஆய்வாளார் மாதேஷ்வரன்,உரிகம் வருவாய் ஆய்வாளர் பசவராஜ், முதுநிலை வருவாய் 
ஆய்வாளர் சுகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் நாகேந்திர குமார் உள்ளிட்ட காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ