விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் திரு உருவச்சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்த கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் இந்திய அரசியல் அமைப்பினை உருவாக்கியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்த டாக்டர் அம்பேத்கரின் 69 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் ஊர்வலமாக வந்து தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் திருஉருவச்சிலைக்கு மாதேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவருக்கு புகழஞ்சலியும் செலுத்தினார்கள்.
அப்போது டாக்டர் அம்பேத்கரின் சித்தனைகள், போதனைகளை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்துக் கொண்டு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ.சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் நகர செயலளர் ஆலப்பட்டி ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்.கொண்டு டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
