கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளினை முன்னிட்டு அவரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில்
இந்தியாவின் சுதந்திரத்திற்க போராடிய மாவீரன் தீரன் சின்னமலையின் 220 வது நினைவு கடைபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மாவீரன் தீரன் சின்னமலையின் திருஉருவப்படத்திற்கு கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியினை சேர்ந்த மாவட்டப் பொருளாளர் சிவப்பிரகாசம்,மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன், முன்னாள்ஒன்றியம் வெள்ளை ராஜன் மற்றும் ஒன்றிய செயலாளர்களான சுரேஷ், திருப்பதி, தேவா, மாவட்ட மகளிர் அணி மாதம்மாள், துணை செயலாளர் தேவிகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பெரும் திறளாகக் கலந்துகொண்டு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இந்தக் நிகழ்ச்சியின் போதுகொங்குநாடு தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு அவரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.
மாருதி மனோ