ஜெகதேவி துரை மாடர்ன் (சிபிஎஸ்இ) பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.!
கிருஷ்ணகிரி
ஜெகதேவி துரை மாடர்ன் (சிபிஎஸ்இ) பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி, தண்ணீர்பள்ளம் கிராமம் துரை மார்டன் பள்ளி (சிபிஎஸ்இ) யில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ழ்சியில் பள்ளி நிறுவனர் ஜெ.டி. மணி அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் பள்ளி தாளாளர் ம.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மற்றும் நிர்வாக இயக்குனர் அ.சிந்து வரவேற்புரை ஆற்றினார். பொங்கல் விழாவில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த கோலப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு வண்ண வண்ண கோலங்கள் போட்டனர்.
அதில் சிறந்த கோலத்தின் முதல் மூன்று நபர்களுக்கு சிறப்பு பரிசும் மற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் பொங்கல் வைத்து அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இனிப்புகள் வழங்கி இனிதே கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை அனைத்து பணியாளர்களும் செய்தனர்.
விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் நன்றி உரை கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
