தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்பு.
தமிழர்களில் பாரம்பரிய பண்டிகைகளின் ஒன்றான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் அனைத்து தரப்பட்ட மக்களும் பொங்கல் விழாவினை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம், எச்.எம்.எஸ்.தொழிலாளர் சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி கிளை சார்பில் கிருஷ்ணகிரி சங்க அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது ,
கிளை சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கிளை சங்கத் செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் இளங்கோ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இருதயநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் குமார், மாவட்ட செயலாளர் இளங்கோவன் மாவட்ட பொருளாளர் சீனப்பா கவுடு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து புதுமண்பானையில் பொங்கலிட்டனர்.
சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைப்பெற்ற இந்த பொங்கல் விழாவில் செங்கரும்புகள், மஞ்சம் கிழக்கு, மா இலை தோரணங்கள் கட்டி சூரிய கடவுளுக்கு படையலிட்டு பொங்கலோ , பொங்கல் என முளக்கமிட்டு வழிபட்டனர்.
மேலும் இந்த விழாவில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள், கிளை சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் நன்றி கூறினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
