கிருஷ்ணகிரியில் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம், நகராட்சி ஊழியர்கள் அகற்றியதால் பரப்பரப்பு.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சாந்தி நகர் 3 வது தெருவில் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டிப்பட்டிருப்பதாக இதே பகுதியை சேர்ந்த ஜோசபின் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்து நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ள 9 கட்டிடங்களுக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கினர்.
ஆனால் கால அவகாசம் முடிந்த நிலையில், அப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நகர போலீசார் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று நகராட்சி அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்புகள் தெரிவித்த போதும் போதிய கால அவகாசம் வழங்கியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
