கிருஷ்ணகிரி  கே. ஆர். அணை செயற்பொறியாளராக பொறுப்பேற்றுள்ள சபரிநாதனுக்கு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்தினர்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி  கே. ஆர். அணை செயற்பொறியாளராக பொறுப்பேற்றுள்ள சபரிநாதனுக்கு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்தினர்.!

கிருஷ்ணகிரி  கே. ஆர். அணை செயற்பொறியாளராக பொறுப்பேற்றுள்ள சபரிநாதனுக்கு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்தினர்.

கிருஷ்ணகிரி கே.ஆர். பி. அணை செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்த அறிவொளி பதவி உயர்வு பெற்று சென்றுள்ளதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பணி செய்து வந்த சபரிநாதன் கிருஷ்ணகிரி கே .ஆர் .பி. அணை செயற்பொறியாளராக பொறுப்பேற்று கொண்டார். அவரை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்தினார்கள்.

தொடர்ந்து பாசன விவசாய சங்கத்தினை சேர்ந்தவர்கள் பாசன விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு கடைமடை விவசாயிகள் வரை பயன் பெற ஏரி கால்வாய்களை தூர்வாரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது உதவி செயற் பொறியாளர் பொன்னிவளவன் மற்றும் பாசன விவசாய சங்கத்தினை சேர்ந்த காவேரிப்பட்டணத்தை சேர்ந்த கிருஷ்ணன், குப்புசாமி, வெங்கடேசன், பழனி, சின்னசாமி என்ற துரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ