உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான ஆலோசனை வழிகாட்டல் குழு கூட்டம் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான ஆலோசனை வழிகாட்டல் குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளி கல்வித்துறை குழந்தைகள் நல பாதுகாப்பு திட்டம் காவல்துறை சமூக பாதுகாப்பு துறை நுகர்வோர் பாதுகாப்பு துறை, மருத்துவர்.செந்தில்குமார் நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை முன்னிலையில், வணிகர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான வழிகாட்டு குழு உறுப்பினர் மற்றும் நுகர்வோர் விழிப்புணர் நலச்சங்க மாநிலத் தலைவர் திரு.ஏஜி. ஜாய் அவர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள8 உணவுப் பொருட்கள் பொட்டல பொருட்களில் காளவதி தேதி, தயாரிப்பு தேதி, எடை அளவு, சில்லறை விற்பனை விலை, தொடர்பு எண்கள் போன்ற விவரங்கள் இல்லாத நெகிழியில் பொட்டலம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை குறித்து, குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை , தொழிலாளர் நலத்துறை, காவல்துறை என தலையிட்டு நடைமுறைப்படுத்திடவும், சுகாதாரமான , சுத்தமான உணவுப் பொருட்கள் மூலம் குறித்த நாட்களில் பயன்படுத்தும்அளவிற்கு கண்காணிக்கவும், தவறும் பட்சத்தில் பறிமுதல் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், சாலையோர உணவு பொருட்கள் தயாரிப்புகளில், இறைச்சி கடைகளில் கண்ணாடி பேழை கொண்டு சுகாதாரமான, சுத்தமான, பாதுகாப்பான உணவுகளை தயார் செய்து விற்பனை மேற்கொள்ளவும் பொது மக்களின் நலனையும், சுகாதாரத்தையும், பாதுகாத்திடும் வகையில் வேண்டுதல் வைக்கப்பட்டது.
FEMALE INFERTILITY (ஃபீமேல் இன்ஃபெர்டிலிட்டி) வேகமாக பரவி வருகிறது.
இதற்கு காரணமாக PCOS PCODS. மலட்டுத்தன்மை உருவாகிறது. துரித உணவுகளில் பிளாஸ்டிக் தன்மை கொண்ட இரசாயன கலவைகள் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பெண்கள் புகைக்கும் பழக்கம் உள்ளதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரதான காரணமாக சானிட்டரி நேப்கின் மூலம் பரவி வருவதை TOXICS- LINKS -டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற டெல்லியை மையமாகக் கொண்ட தன்னார்வ அமைப்பின். NGO நிறுவனத்தின் முனைவர். பிரீத்தி மகேஷ் கூறுகையில் VOLATILE ORGANIC CHEMICAL COMPOUND என்ற முறையில் HARMFUL CHEMICALS உள்ளதாகவும், அவை வெண்மையாக்க ப்ளீச்சிங் செய்யப்படுவதும், நறுமணத்திற்காகவும், லேசாக இருக்கவும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் அடிப்படையில் பல்வேறு நச்சுக்கள் பெண்ணுறுப்பு மூலமாக கருப்பைக்குள்ளே செல்லும் அபாயம் உள்ளது. என்பதை குறிப்பிட்ட ஆவணப்படுத்தி கூறுகிறார்.
ஆனால் CENTRAL DRUGS STANDARD CENTRAL ASSOCIATION (சென்ட்ரல் ட்ரக் ஸ்டேண்டர்ட் சென்ட்ரல் ஆர்கனைசேஷன்) CDSCO-கீழாக இருப்பினும், அவைகள் உள்ளடக்கம் காட்சிப்படுத்தப்படுவதில்லை. இவை கட்டாய பதிவாக்கவும், செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இவை மெட்டீரியல் ப்ரோடுக்ட், மெட்டீரியல் டிவைஸ் ஆக மட்டும்தான் நுகர்வோர்-சரக்கு (CONSUMER GOODS) வகையில் கன்ஸ்யூமர் ப்ராடக்டாக, கன்ஸ்யூமர் கூட்சாக வகைப்படுத்தப்படவில்லை.
13 முதல் 50 வயதுக்கிடையே உள்ள குழந்தைகள், பெண்மணிகள் பயன்படுத்துவதாக இருப்பது ஏறக்குறைய 35-ஆண்டுகள் இவை பயன்பாட்டுக்கு இருக்கும் காலத்தில்... ஆய்வில் நச்சு போன்ற உபயோகத்தால் மலட்டுத்தன்மையும் , புற்றுநோய் வர அதிக வாய்ப்பாக அமைந்துள்ளது.
கவனம் செலுத்தி தற்போது BIS- இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் உள்ளீடுகளை ஆய்வு செய்து. ISI( ஐஎஸ்ஐ) போன்ற குறியீடுகள் கணக்கில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதே போல் சவர்மா, இறைச்சி சுட்டு தீயில் கருகி சாலை ஓரக் கடைகளில் புற்றீசலாக, அங்கீகரிக்கப்படாத உரிமம் கொண்ட வாகனங்கள் மூலம் தயார் செய்து வணிகப் பயன்பாட்டில் இறைச்சி உணவு தயாரிப்பில் விற்பனை நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுமைக்கும் பிரதான நகரங்களில் இரவு நேரத்தில் பல்வேறு இறைச்சி விற்பனைகள் அவைகளில் பெரும்பாலும் சிந்தெடிக் மெட்டீரியல்களான நிறங்களைக் கொண்ட கலவைகளும், சுவை ஊட்டிகளும் அரசு தடை செய்யப்பட்டு இருக்கிற மைனஸ் என்ற உணவுப் பொருள் தொடர்ச்சியாக அனைத்து இறைச்சி உணவு விற்பனை கடைகள், அசைவ ஹோட்டல்களிலும் வழங்கிக் கொண்டுதான் வருகிறார்கள். இதை கவனத்தில் கொடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதான நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ்குமார்.IAS அவர்கள் கூறுகையில்.... உணவுப்பொருள், உணவு பாதுகாப்புத் துறையின் சட்ட விதிகளுக்குட்பட்டு பொட்டலங்கள் செய்யும் பொழுது அந்த விதிகளில், பயன்பாட்டிற்கும், செய்தித்தாள்களில் மடித்து கொடுப்பது, தடை செய்யப்பட்ட நிறங்களை பயன்படுத்துவது, சட்டவிதிகளுக்கு எதிரான நிறங்களை, சுவையூட்டிகளை பயன்படுத்துவது, முற்றிலும் கண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டை தவிர்த்திடவும், உணவுப் பொருள்களில் சூடான பொட்டலங்கள் நெகிழிகளை கொண்டு உணவு பொருள்வழங்குவதை தடை செய்ய வேண்டிய ஒன்று.
எனவே, உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மற்றும் தொழிலாளர் துறை மற்றும் காவல் துறை மூலமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை, பறிமுதல், அபராதம் போன்றவைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்பதையும், மேலும் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயமாக பதிவு சான்று, வணிக உரிமச் சான்று போன்றவைகளை பெற்று வணிகம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் அனைத்து பள்ளி கல்வித்துறையின் உணவு வழங்கும் அலுவலர்கள் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டத்தில் அயோடின் கலந்த உப்பினையும், தரமான உணவு முறைகளை கடைப்பிடித்து குழந்தைகளுக்கு வழங்கவும், அரசின் நோக்கத்தை நிறைவேறும் வகையில், ஒத்துழைப்புடன் செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டு கூட்டத்தை நிறைவு செய்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ