முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 1210 கோடி முதலீட்டில் 7900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். !
கிருஷ்ணகிரி

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 1210 கோடி முதலீட்டில் 7900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நான்கு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதோடு
ரூ. 23,303.15 கோடி முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ. 1003.85 கோடி முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆக மொத்தம், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
செய்தியாளர்
மாருதி மனோ