காட்டிநாயனப்பள்ளி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சிமெண்ட் சாலை.!

கிருஷ்ணகிரி

காட்டிநாயனப்பள்ளி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சிமெண்ட் சாலை.!

காட்டிநாயனப்பள்ளி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை திமுக சட்ட மன்ற உறுபினர் தே.மதியழகன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தக்கோரிக்கையை நிறை வேற்றிடும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 19 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது.இதனையடுத்து காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதனை திமுக சட்ட மன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்கள்  கலந்துக் கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜைகள் மேற்கொண்டு பணியினை முன்னாள் கவுன்சிலர் திருமதி கலா வேலாயுதம் தலைமையில் துவக்கி வைத்தார். 

இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில்,மாவட்டத் துணை அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மகளிர் அணி தலைவி வள்ளியம்மாள், துணைசேர்மன் கிருபாகரன், ஒன்றிய துணை செயலாளர் பையம்மாள் முருகன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவி மஞ்சுளா வெங்கடேசன், விவசாய அணிதுணை அமைப்பாளர்கள் தக்காளி மாணிக்கம், ராமச்சந்திரன், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், சீனிவாசன், மணிகாரர் அண்ணாமலை ஊர் கவுண்டர் ஹரி நாராயணன், முன்னாள் துணைத் தலைவர் வெங்கடாசலம், கிளை செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் முனீஷ், கணேசன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கண்ணன், பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ