புளியந்தோப்பு கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 250 காளைகள்.!

கிருஷ்ணகிரி

புளியந்தோப்பு கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 250 காளைகள்.!

கிருஷ்ணகிரி  அருகே உள்ள புளியந்தோப்பு கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 250 காளைகள் பங்கேற்பு - சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான கிராம மக்கள் கண்டு மகிழ்ந்தனர் .

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ராயப்பனூர் புளியந்தோப்பு கிராமத்தில் முதலாம் மாண்டு மாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

எருதுவிடும் விழாக்குழுவினர்கள் முன்னிலையில்
 நடைபெற்ற இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, சூளகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி,  வாணியம்பாடி, ஆம்பூர், பர்கூர், பாகலூர், கப்பல்வாடி, ஊத்தங்கரை, ஆந்திர மாநிலமான குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து   250 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. தமிழக அரசின் நிபந்தனைகள் படி எருதுகளை முழு பரிசோதனை செய்யப்பட்டு இருபுறமும் தடுப்புகள் அமைத்து அதன் நடுவே எருதுகள் ஓட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு எருதுகளாக விடப்பட்டது, இதில் 120 மீட்டர் தூரத்தினை விரைவாக கடந்த எருதுகளுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த எருதுகளை இளைஞர்கள் உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த எருது விடும் விழாவில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய எருதுகளுக்கு முதல் பரிசாக ரூ. 1,25,000. இரண்டாவது பரிசாக ரூ 1,00,000, 3-ஆம் மூன்றாவது பரிசாக 75 ஆயிரம்,    4-ஆம் பரிசாக 50,000 ஆயிரம், 5-ம் பரிசாக 40,000 ஆயிரம் வழங்கப்பட்டது. 

இது மட்டுமல்லாமல் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்த எருதுவிடும் விழாவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான  மக்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு கண்டு களித்தனர்.

மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை புளியந்தோப்பு
பகுதியைசேர்ந்த விழா குழுவினர்கள் மற்றும், ஊர் பொதுமக்கள்  சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ