பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி 70வது பிறந்தநாள் விழா.!
கிருஷ்ணகிரி
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி 70வது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரியில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் 70 வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமையில், மாவட்ட தலைவர் முனிராஜ் முன்னிலையில், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சமூக ஆர்வலரும், சமூக நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளருமான சந்திரமோகன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
முன்னதாக கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வெகு சிறப்பாக மாயாவதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த இனிய நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலக செயலாளர் ருத்ரா, காட்டினாயனபள்ளி மாதேஷ், காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் சாந்தி, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் உண்ணாமலை என்கின்ற அம்மு, ஓசூர் தொகுதி பொறுப்பாளர் பரசுராம், மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த தேன்மொழி, நகர தலைவர் முத்தம்மா, நகர செயலாளர் செந்தில், மாவட்ட செயலாளர் சந்தியா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
