பர்கூர் எம்ஜிஆர் நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா .!
கிருஷ்ணகிரி

பர்கூர் எம்ஜிஆர் நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா தே.மதியழகன் எம்எல்ஏவுக்கு அழைப்பு.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் எம்ஜிஆர் நகரில் 14-வது வார்டில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏவுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக அழைப்பிதழ் வழங்கினர்.
ஊர் கவுண்டர் கோவிந்ராஜ், நாட்டாமை மாதேஷ், தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.துரைசாமி,14- வது வார்டு கவுன்சிலர் ஜீவா துரைசாமி, சிவகார்த்திகேயன், காந்தி, ஆர்,ராஜேஷ் உட்பட ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ