பா.ம.க சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 10வது ஆண்டு நினைவு நாள் .!
தென்காசி

தென்காசியில் பா.ம.க சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 10வது ஆண்டு நினைவு நாள்
தென்காசி ஜுலை27
இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 10-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தென்காசி ஹவுசிங் போர்டு நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் சிங்கராயன் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட அவரது புகைப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுசி சுந்தர், சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் இலத்தூர் கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் நயினாரகரம் குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவர் திருமலை குமாரசாமி யாதவ் தொழில் அதிபர் கிருஷ்ணகுமார் சமூக நீதிப் பேரவை பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் மாவட்ட மகளிர் அணி தலைவர் ஆயிரப்பேரி மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர தலைவர் செண்பக குமார் செங்கோட்டை நகர செயலாளர் பேமஸ் பாய் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் வே சாமி (எ) பரமசிவன் தென்காசி நகர செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்