என் ஓட்டு விற்பனைக்கு அல்ல – நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி.!

கிருஷ்ணகிரி

என் ஓட்டு விற்பனைக்கு அல்ல – நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி.!

என் ஓட்டு விற்பனைக்கு அல்ல – நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி.

இந்த பேரணியில்,  தன்னார்வ அமைப்புகளான, கேண்டல் பவுண்டேஷன், நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கம்,  அறப்போர் இயக்கம், கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம், வாசவி கிளப்,  கிருஷ்ணகிரி லயன்ஸ் கிளப், இந்திய மருத்துவ சங்கம், கம்பன் கழகம் என கலந்து கொண்டதில், கிருஷ்ணகிரி காவல்துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் அவர்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேர்தல் பிரச்சாரமாக ஜெயராம் வெங்கடேசன்,  ராதாகிருஷ்ணன் பிரச்சார முழக்கங்களுடன் பேரணி, நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் முதல் துவங்கி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ரவுண்டானா வரை வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து நிறைவுற்றது.

 இந்திய தேர்தல் சட்டத்தின் அடிப்படையான ஜனநாயக விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது. Representation of the People Act-1951 என்பது இந்திய தேர்தலில் நடக்கும் குற்றங்கள், தவறுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் முக்கிய சட்டமாகும்.

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல், வாக்காளர்களின் உரிமை, பாதுகாப்பு, ஊழல் மற்றும் தவறான நடைமுறைகளை தடுப்பது, “ஓட்டுக்கு பணம் வாங்குதல்” – சட்டப்படி குற்றம். பிரிவு -123 – Corrupt Practice (ஊழல் நடைமுறை)பணம், பரிசு, சலுகை, வாகனம், உணவு போன்ற ஏதேனும் நன்மை கொடுத்து வாக்கு கேட்பது, அல்லது வாக்காளர் அதை பெறுவது கூட குற்றம் இதை “Bribery” (லஞ்சம்) என சட்டம் குறிப்பிடுகிறது அதாவது,
“Vote வாங்க பணம் கொடுத்தாலும் குற்றம், வாங்கினாலும் குற்றம்” தொடர்புடைய தேர்தல் குற்றங்கள் சட்டப்படி, அனைத்தும் தவறு: லஞ்சம் (Bribery)பணம், பரிசு, சலுகை வழங்குதல், வாக்கு கேட்டல் அச்சுறுத்தல் (Undue Influence) மிரட்டி வாக்கு கேட்டல், மத/ஜாதி அடிப்படையில் வாக்கு கேட்பது, மதம், ஜாதி, சமூகம் கொண்டு வாக்கு கேட்பது, போலியான தகவல் பரப்புதல், மற்ற வேட்பாளரை தவறாக காட்டுதல், வாக்குச்சாவடி கைப்பற்றுதல் (Booth Capturing) வாக்காளர்களை தடுத்தல், போலி வாக்கு போடுதல், போன்றவற்றிக்கு தண்டனைகள், சிறை தண்டனை, அபராதம் தேர்தலில் போட்டியிட தடை (6 ஆண்டுகள் வரை) தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் (Awareness Campaign) “நேர்மையான வாக்கு”, “லஞ்சமில்லா தேர்தல்”, “சுய சிந்தனையுடன் வாக்களித்தல்” என் ஓட்டு – என் உரிமை, ஓட்டு விற்காதே – நாட்டை காப்போம் பணம் வாங்கினால் – ஜனநாயகம் சிதையும்.

தேர்தல் குறித்த புகார்களுக்கு, தேர்தல் ஆணையம் (Election Commission) 1950 என்ற எண்ணிலும், “cVIGIL” - mobile app மற்றும் அருகிலுள்ள தேர்தல் அதிகாரி.. என தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது.

செய்தியாளர்

மாருதி மனோ