சிபிஎஸ்இ அரசுப் பொதுத்தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவன் ஜிதேந்திரா, சரக அளவில் 492 மதிப்பெண்கள்.!

கிருஷ்ணகிரி

சிபிஎஸ்இ அரசுப் பொதுத்தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவன் ஜிதேந்திரா, சரக அளவில் 492 மதிப்பெண்கள்.!

சிபிஎஸ்இ அரசுப் பொதுத்தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவன் ஜிதேந்திரா, சரக அளவில் 492 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்ததால் பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டு.

அண்மையில் வெளிவந்த சிபிஎஸ்இ அரசுப் பொதுதேர்வு முடிவுகளில் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த மாணவன் ஜிதேந்திரா 500/492 மதிப்பெண்கள் பெற்று சரக அளவில் முதலிடம் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார். சரக அளவில் வெற்றி பெற்ற மாணவன் ஜிதேந்திரா வுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் திருமதி மேரி அனிதா தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவிற்கு பள்ளியின் துணை நிர்வாக அலுவலர் ராஜேஷ் பாபு, மண்டல கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் விவேக் பாண்டியன், சிவமோகன் ரெட்டி, துணை முதல்வர் திருமதி கலைவாணி, சி. பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஆகியோர் சரக அளவில் வெற்றிபெற்ற இப்பள்ளி மாணவன் ஜிதேந்திரா வுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார்கள்.

பின்னர் இது குறித்து மாணவன் ஜிதேந்திரா கூறுகையில் சரக அளவில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுக்க உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோருக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார், மேலும் இப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விருப்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இப்பள்ளியில் படித்த மாணவர்களில் 5 பேர் தமிழ்ப் பாடப்பிரிவில் 100 / 100 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.  இதே தொழில்நுட்ப பிரிவில் 7 மாணவர்கள் 100 / 100 மதிப்பெண்களும் தேர்வு எழுதிய நூறு மாணவர்களில் 99 மாணவரிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்

மாருதி மனோ